பிரபல காளஹஸ்தி கோவிலில் நடிகை நமீதா சிறப்பு பூஜை!
நடிகை நமீதா தனது கணவருடன் சேர்ந்து காளஹஸ்தி சிவன் கோவிலில் ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை செய்தார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் பாஜகவில் முக்கிய நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று தனது கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்தார். கோவிலில் நடந்த ராகு-கேது சர்ப்ப தோஷ சிறப்பு நிவாரண பூஜையில் இருவரும் பங்கேற்றனர். பின்னர் காளஹஸ்தீஸ்வரரையும், ஞானபிரசூனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தனர்.
சுவாமி தரிசனம் செய்த பின், கோவில் வளாகத்தில் இருந்த அவர்களுக்கு, கோவில் நிர்வாகத்தினர் தீர்த்த பிரசாதம் மற்றும் சுவாமி உருவம் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகை நமீதாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்தனர். அதன் பின் நமிதாவும் அவரது கணவரும் காரில் ஏறி கிளம்பினர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!