நடிகை சாக்‌ஷி அகர்வால் திருமணம்... சிறுவயது நண்பரைக் காதலித்து கரம் பிடித்தார்!

 
சாக்‌ஷி அகர்வால்

இன்று நடிகை சாக்க்ஷி அகர்வால் திருமணம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சிறுவயது முதலே நெருங்கி பழகி வந்த நண்பரை காதலித்து வந்த நிலையில் இன்று காலை திருமணம் செய்துக் கொண்டார்.

மாடல் அழகியாக விளம்பரங்களில் நடித்து வந்த நடிகை சாக்‌ஷி அகர்வால் அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் ரசிகர்களிடையே பிரபலமானார். அவ்வப்போது விளம்பரங்களில் நடித்தும், க்ளாமர் அழகியாக போட்டோ சூட் நடத்தியும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வந்த சாக்‌ஷி அகர்வால், ரசிகர்களிடையே தனது பிரபலத்தை தக்க வைத்து வந்தார்.

அட்லீ இயக்கத்தில் 2013ல் வெளியான "ராஜா ராணி" திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்க்ஷி அகர்வால்  தற்போது நடித்து முடித்துள்ள "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கிற இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அஜித்தின் விஸ்வாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை 3, காலா உள்ளிட்ட படங்களிலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை நடிகை சாக்க்ஷி அகர்வாலின் திருமணம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தனது நீண்ட நாள் நண்பரான நவனீத் மிஸ்ரா என்பவரை காதலித்து வந்த நிலையில் இன்று காலை கரம்பிடித்துள்ளார்.

சாக்‌ஷி அகர்வால்

இந்நிலையில் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால், "என்னுடைய சிறுவயது நண்பர் முதல் ஆத்ம தோழர் வரை.. வானத்தின் கீழ் காதல் மற்றும் மலைகளுக்கு மத்தியில் நானும் நவ்நீத்தும்.. 'என்றென்றும்' என்றானோம்" என்று பகிர்ந்துள்ளார். திரையுலகத்தினரும், ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web