ஜனவரி 11 முதல் நெல்லை சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு!
![வந்தே பாரத்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/b2b2e3c701789cae43fc9aaba19b8229.png)
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை, நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ரயிலில் ஜனவரி 11 முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக ஜனவரி 11-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், திருவனந்தபுரம்-காசர்கோடு 'வந்தே பாரத்' ரயிலில் கூடுதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!