இன்று காலை 10 மணி முதல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கை துவக்கம்!

 
தமிழகம் முழுவதும் நாளை முதல் என்ஜினீயரிங் படிப்பிற்கான துணை கலந்தாய்வு ஆரம்பம்!

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை துவங்கி நடைபெற உள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்  433 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில்  இளநிலை படிப்புகளுக்காக  1.80 லட்சம் காலியிடங்கள்  கலந்தாய்வு மூலம் நிரப்பட்டு வருகின்றன.  

இதனை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆன்லைன் மூலம் நடத்திவருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி  வெளியிடப்பட்டது.

 தமிழகம் முழுவதும் நாளை முதல் என்ஜினீயரிங் படிப்பிற்கான துணை கலந்தாய்வு ஆரம்பம்!
இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கிய நிலையில், முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது.

தொடர்ந்து  அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இவர்களுக்கு விளையாட்டு பிரிவில் 38 இடங்கள் , முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11 இடங்கள் , மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 664 இடங்கள் உள்ள நிலையில் 3 பிரிவுகளுக்கும்  சேர்த்து 404 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 

கலந்தாய்வு
இதனைத் தொடர்ந்து இன்று ஜூலை 25 ம் தேதி முதல் ஜூலை 28ம் தேதி வரை இதர சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு  நடைபெறும்.  அதன்பிறகு, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதுகுறித்த  விரிவான கால அட்டவணை, கலந்தாய்வில் பங்கேற்கும் வழிமுறைகள் குறித்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ இணையதளமான   https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web