ஆஸ்கார் விருதுக்கு ‘ஆடுஜீவிதம்’ படம் ஆரம்ப சுற்றுகளில் தேர்வு!
97வது ஆஸ்கார் விருதுகளுக்கான ஆரம்ப சுற்றில் பிளெஸ்ஸியின் ஆடுஜீவிதம் படம் சிறந்த படத்திற்கான பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டது. இந்த பட்டியலில் 25 திரைப்படங்கள் உள்ளன. இதில் இருந்து 10 படங்கள் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்தியாவில் இருந்து வரும் படங்கள் பொதுவாக வெளிநாட்டு சினிமா பிரிவில் கருதப்படுகின்றன. இருப்பினும் சிறந்த படத்திற்கான பொதுப் பிரிவில் இந்தியத் திரைப்படம் கருதப்படுவது அரிது. நேற்று ஜனவரி 8ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு சதவீதத்தை கணக்கிட்ட பிறகே இரண்டாம் சுற்று நுழைவு நடைபெறும்.
முன்னதாக, மலையாளத் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டிலும் இதே முறையில் ஆரம்பச் சுற்றில் நுழைந்தது. ஆனால் அது இறுதிசுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
மலையாளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட நாவலை ஆடுஜீவிதமாக ப்ளெஸி திரைப்படமாக மாற்றியபோது ரசிகர்களுக்கு அது வேறொரு அனுபவத்தைக் கொடுத்தது. இப்படத்தில் ஹீரோ நஜீப்பாக பிருத்விராஜ் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் சிறந்த நடிகர் உட்பட ஏழு மாநில விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!