தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! வைரலாகும் புகைப்படம்!

 
தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! வைரலாகும் புகைப்படம்!

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 15ம் தேதி தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அங்கு தொடர்ந்து பதற்றநிலை நிலவி வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறின. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.தலீபான்களில் முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! வைரலாகும் புகைப்படம்!


இந்த நிலையில் புதிய அரசை அமைப்பது குறித்து தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது மேலும் அதிகரித்து இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்துள்ளார். இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைக்கும் வகையில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்குச் சென்றுள்ளார்.


இதை பரதர் குழு விரும்பவில்லை என்பதால்தான் அங்கு அதிபரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலீபான்களுக்கு உள்ளேயே கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பாகிஸ்தானின் தலையீட்டிற்கு எதிராக அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் மூக்கை நுழைக்க கூடாது எனவும், ஆப்கானிஸ்தான் மக்கள் எப்போதும் வெளிநாட்டு ஆதிக்கத்தை விரும்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


தாலிபான்கள் வானத்தை நோக்கியும், போராட்டக்காரர்களை நோக்கியும் தலீபான்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். தொடர்ந்து தலீபான் துப்பாக்கி சூடு நடத்தி வருவதால் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இருந்தாலும் ஆப்கானிஸ்தானில் அச்சமின்றி பெண்கள் தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். தங்கள் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிலைநிறுத்த போராடி வருகிறார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் தலீபான்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறார்கள்.

தாலிபான்களை எதிர்க்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள்! வைரலாகும் புகைப்படம்!

அதனை சித்தரிக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “பெண்கள் இல்லாத மந்திசபை தோல்வியடையும்” என்று பெண்கள் கோஷமிட்டு வருகின்றனர். தலீபான் படையைச் சேர்ந்த ஒருவர் ஹிஜாப் அணிந்த பெண் போராட்டக்காரரை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய காட்சி ஒன்று காபூலின் தெருக்களில் எடுக்கப்பட்டது. ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ஆப்கானிஸ்தானில் பெண்களின் மன உறுதியை காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web