தென் கொரியாவை தொடர்ந்து கனடாவில் அதிர்ச்சி.. தரையிறங்கும் போது விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து!
கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் சுமார் 80 பயணிகளுடன் ஏர் கனடா விமானம் தரையிறங்கியது. ஆனால், தரையிறங்கும் போது விமானத்தின் தரையிறங்கும் கருவி செயலிழந்தது. இதனால் விமானத்தின் இறக்கை பகுதி ஓடுபாதையில் உரசி, திடீரென தீப்பிடித்தது. விமானத்தில் தீப்பற்றி எரிவதைப் பார்த்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர்.
🚨#BREAKING: Watch Wild footage as a Air Canada flight lands with a broken landing gear resulting in the wing scraping the runway causing a fire⁰
— R A W S A L E R T S (@rawsalerts) December 29, 2024
📌#Halifax | #Canada
Watch as Air Canada Flight 2259 made a dramatic landing at the Halifax sanfield international airport in Nova… pic.twitter.com/IStX6JHGTo
இதற்கிடையில், விமான நிலைய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முன்னதாக, தென் கொரியாவில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் கனடாவில் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!