திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! மீண்டும் மஞ்சள் பை!!

 
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! மீண்டும் மஞ்சள் பை!!

தமிழகத்தில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதனை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைகிறது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! மீண்டும் மஞ்சள் பை!!


இதன் அடிப்படையில் 2019ல் அப்போதைய தமிழக அரசு 14 வகையான ப்ளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது. ஆனால் தற்போது வரை அதை செயல்படுத்துவதில் பெரும் சவால் அதிகரித்து வருகிறது. வர்த்தகர்களும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை உருவாகியுள்ளது.


இதனை முன்னெடுக்கும் வகையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதத்தி தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!! மீண்டும் மஞ்சள் பை!!


வணிக நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் அரசுடன் கைகோர்த்து இந்த மக்கள் இயக்கத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

From around the web