இந்தியாவுடன் எல்லை மோதல் முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம்.. சீன அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
ஜூன் 2020 இல், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவங்களும் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக படைகளை குவிக்கத் தொடங்கின. இதன் காரணமாக கிழக்கு லடாக்கில் சுமார் நான்கு ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக இந்தியா நேற்று அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை சீனா தற்போது உறுதி செய்துள்ளது. இதன்படி கிழக்கு லடாக்கில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், "சமீபத்தில், எல்லை பிரச்னை தொடர்பாக, சீனா - இந்தியா இடையே, ராஜதந்திர ரீதியாகவும், ராணுவம் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையே, தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இந்த தீர்மானங்களை, இந்தியாவுடன் இணைந்து, செயல்படுத்த, சீனா செயல்படும்’’ என்று உறுதியளித்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!