அதிமுக நிர்வாகி கார் மோதி தொழிலாளி பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
தமிழகத்தில் டிசம்பர் 18ம் தேதி இபிஎஸ் ஆத்தூரில் நடைபெற்ற கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு காரில் சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் காருக்கு பின்னால் சென்ற அதிமுக சேர்மன் கார், டூவீலர் மீது மோதி காவலாளி பலியானார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிமுக ஒன்றிய சேர்மனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன். அதிமுக ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இபிஎஸ் காரின் பின்னால், பல கார்கள் மின்னல் வேகத்தில் சென்றன. அதே போல் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதனும் காரில் சென்றார்.
அவர் சென்றது பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு சொந்தமான அரசு காராகும். காரிப்பட்டி அருகே மின்னாம்பள்ளி பக்கம் மின்னல்வேகத்தில் சென்றபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த தனியார் பாலிடெக்னிக்கின் காவலாளி தங்கவேல் மீது ஜெகநாதன் கார் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காவலாளி உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் ஜெகநாதனின் கார் டிரைவர் அண்ணாதுரை மீது வழக்கு பதிவு செய்து காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலெக்டரின் அனுமதி இல்லாமல் அரசு காரை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிக்கு சென்ற காரணத்தால் தலைவர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கார் செல்கிறது. அதற்கு பின்னால் 4 கார்கள் செல்கின்றன. இந்நிலையில் சற்று இடைவெளியிட்டு ஜெகநாதன் செல்லும் காரும் வேகமாக செல்கிறது. மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் ரோட்டை கடக்கும் டூவீலர் மீது மோதி தூக்கி வீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து நடந்ததும் அந்த இடத்திற்கு பொதுமக்கள் பதற்றத்துடன் ஓடிவரும் காட்சியும் பதிவாகி உள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் , ‘விபத்து குறித்து பனமரத்துப்பட்டி பிடிஓ விசாரணை நடத்தி கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதன்மீது கலெக்டர் தான் நடவடிக்கை எடுப்பார்’ என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் டிசம்பர் 18ம் தேதி இபிஎஸ் ஆத்தூரில் நடைபெற்ற கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து ஆத்தூருக்கு காரில் சென்றார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் காருக்கு பின்னால் சென்ற அதிமுக சேர்மன் கார், டூவீலர் மீது மோதி காவலாளி பலியானார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிமுக ஒன்றிய சேர்மனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன். அதிமுக ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இபிஎஸ் காரின் பின்னால், பல கார்கள் மின்னல் வேகத்தில் சென்றன. அதே போல் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெகநாதனும் காரில் சென்றார். அவர் சென்றது பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு சொந்தமான அரசு காராகும். காரிப்பட்டி அருகே மின்னாம்பள்ளி பக்கம் மின்னல்வேகத்தில் சென்றபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த தனியார் பாலிடெக்னிக்கின் காவலாளி தங்கவேல் மீது ஜெகநாதன் கார் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காவலாளி உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் ஜெகநாதனின் கார் டிரைவர் அண்ணாதுரை மீது வழக்கு பதிவு செய்து காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலெக்டரின் அனுமதி இல்லாமல் அரசு காரை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிக்கு சென்ற காரணத்தால் தலைவர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கார் செல்கிறது. அதற்கு பின்னால் 4 கார்கள் செல்கின்றன. இந்நிலையில் சற்று இடைவெளியிட்டு ஜெகநாதன் செல்லும் காரும் வேகமாக செல்கிறது. மின்னல் வேகத்தில் சென்ற அந்த கார் ரோட்டை கடக்கும் டூவீலர் மீது மோதி தூக்கி வீசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து நடந்ததும் அந்த இடத்திற்கு பொதுமக்கள் பதற்றத்துடன் ஓடிவரும் காட்சியும் பதிவாகி உள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் , ‘விபத்து குறித்து பனமரத்துப்பட்டி பிடிஓ விசாரணை நடத்தி கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதன்மீது கலெக்டர் தான் நடவடிக்கை எடுப்பார்’ என தெரிவித்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!