நவ.2ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 
எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், வரும் நவம்பர் 2ம் தேதி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பூத் கிளைக் கழகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி

அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகமான ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 2.11.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

எடப்பாடி இபிஎஸ்

இந்த கூட்டத்தில், பூத் (பாகம்) கிளைக் கழகங்களை அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இக்கூட்டம், கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறுவதால், அதிமுக வட்டாரங்களில் இதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?