இளம்பெண்களிடம் பாலியல் சில்மிஷம் செய்த அதிமுக நிர்வாகி... துடைப்பத்தால் அடித்து விரட்டிய தோழிகள்!

 
பொன்னம்பலம் அதிமுக பாலியல்

தனது வீட்டில் குடியிருந்த இளம்பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன்னம்பலம் தொல்லைத் தாங்காமல் இளம்பெண்கள் வீட்டைக் காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு குடிபெயர்ந்த நிலையில், அங்கும் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்தவரை தோழிகள் துடைப்பத்தால் அடித்து துரத்தியுள்ளனர். இது  குறித்த புகாரின் பேரில் பொன்னம்பலம் என்பவரைப் போலீசார் கைது செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக என கட்சி பேதமில்லாமல் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் என மாநிலத்தின் பல பகுதிகளிலும் பாலியல் வழக்குகளில் சிக்குகின்றனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருபவர் பொன்னம்பலம். இவருடைய வீட்டில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இளம் பெண்கள் வாடகைக்குத் குடியிருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பொன்னம்பலம் தன்னுடைய வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் வீட்டை விட்டு காலி செய்து வேறு இடத்திற்கு அந்தப் பெண்கள் சென்ற நிலையிலும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அந்த பெண்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று மீண்டும் அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடப்ப கட்டையால் அடித்து விரட்டியுள்ளனர்.

பொன்னம்பலம்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பொன்னம்பலத்தை கைது செய்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web