அதிமுக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்... விபசாரம், வட்டித்தொழில்.. தலைமறைவான 3வது எதிரி!

 
ஓசூர் அதிமுக

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 3-ஆம் தேதி அதிமுக பிரமுகர் ஹரீஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கள்ளக்காதலி மஞ்சுளா (35) மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபசாரம் மற்றும் வட்டிக்குக் பணம் கொடுத்தல் எனப் பல தொழில்களை மஞ்சுளா செய்து வந்துள்ளார்.

டிரைவராகவும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்த ஹரீஷ், வட்டிக்குப் பணம் கொடுக்கல்-வாங்கலிலும் ஈடுபட்டு வந்தார். விபசாரத் தொழில் செய்து வந்த மஞ்சுளாவுடன் ஏற்பட்ட பழக்கத்தால், கணவரைப் பிரிந்திருந்த மஞ்சுளா ஹரீஷைத் தனக்குப் பாதுகாவலராக வைத்துக் கொண்டார்.

ஹரீஷ்

மஞ்சுளா விபசார தொழில் அல்லாமல், வட்டிக்குக் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார் (ரூ. 100-க்கு ரூ. 2 வட்டிக்கு வாங்கி ரூ. 3 வட்டிக்குக் கொடுத்துள்ளார்). மஞ்சுளாவிடம் பணம் சரளமாகப் புழங்குவதைக் கண்ட ஹரீஷ், தனக்குக் கடன் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் நிம்மதியாக அவருடன் வாழ்வதாகவும் கூறி, மஞ்சுளாவிடம் இருந்து ரூ. 80 லட்சம் வரை பணம் பறித்துள்ளார்.

பணப் பறிப்பு மற்றும் வாடிக்கையாளராக வந்த மோனீசுடன் மஞ்சுளா பேசுவதைக் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹரீஷ் தன்னைக் கொடுமை செய்ததாக மஞ்சுளா போலீசில் புகார் அளித்தார். பின்னர் சமரசம் ஏற்பட்டாலும், ஹரீஷ் தொடர்ந்து பணம் கேட்டுத் தொல்லை கொடுக்கவே, மஞ்சுளா மோனீசுடன் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். ஹரீஷைக் கொல்வதற்காக ரூ. 10 லட்சம் பேரம் பேசி, முதலில் ரூ. 4½ லட்சம் அட்வான்ஸாக மஞ்சுளா கொடுத்தார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

கூலிப்படையினர் ஹரீஷைக் கொன்று விட்டு, அதன் புகைப்படத்தை மஞ்சுளாவுக்கு அனுப்பி, அவர் கொலையை உறுதி செய்துள்ளார். மீதித் தொகையை மறுநாள் கொடுக்கவிருந்த நிலையில், போலீசார் மஞ்சுளாவைக் கைது செய்தனர். இந்தக் கொலை வழக்கில் மஞ்சுளா முதல் எதிரியாகவும், மோனீஷ் 2-வது எதிரியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். 3-வது எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள சென்னத்தூர் ரியல் எஸ்டேட் அதிபர் முரளி தலைமறைவாகிவிட்டார். கூலிப்படையைத் தயார் செய்தது, ஹரீஷைக் கண்காணித்துத் தகவல் சொன்னது போன்ற வேலைகளை முரளிதான் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரைக் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!