ஜெயிக்கப்போவது யாரு?! அதிமுக உட்கட்சி தேர்தல் !!

 
ஜெயிக்கப்போவது யாரு?! அதிமுக உட்கட்சி  தேர்தல் !!


தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இனி அ.தி.மு. க.வை ‘இரட்டை தலைமை’தான் வழிநடத்தும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

ஜெயிக்கப்போவது யாரு?! அதிமுக உட்கட்சி  தேர்தல் !!


இது தவிர அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறும். 8 ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதில் “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்” என்று விதிமுறைகள் உள்ளன. அதன்படி கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தேதி நடைபெறும் நாட்கள்.

தேர்தல் ஆணையாளர்கள்:

ஜெயிக்கப்போவது யாரு?! அதிமுக உட்கட்சி  தேர்தல் !!


பொன்னையன் கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
பொள்ளாச்சி வி. ஜெயராமன், எம்.எல்.ஏ கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.
வேட்பு மனு தாக்கல்:
டிசம்பர் 3,2021 காலை 10 மணி முதல் 4,.2021 சனிக் கிழமை பிற்பகல் 3 மணி வரை).
வேட்பு மனு பரிசீலனை:
டிசம்பர் 5, 2021 ,காலை 11.25 மணி
வேட்பு மனு வாபஸ்
டிசம்பர் 6, 2021 மாலை 4 மணி வரை.
தேர்தல் நாள்:
டிசம்பர் 7,2021, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை
டிசம்பர் 8, 2021 புதன் கிழமை. முடிவுகள் அன்றைய தினமே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web