’தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கும் நிதி நிறுத்தம்’.. டொனால்ட் டிரம்ப் திடீர் முடிவு!

அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, டொனால்ட் டிரம்ப் பல்வேறு கடுமையான உத்தரவுகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். உள்நாட்டில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், அதிபராகப் பதவியேற்ற சில நாட்களுக்குள், அவர் ரஷ்யாவிற்கு ஒரு பகிரங்க எச்சரிக்கையை விடுத்தார்.
உக்ரைனுடனான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால், ரஷ்யா கூடுதல் வரிகளையும் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று டிரம்ப் எச்சரித்தார். சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் மீது புதிய வரிகளை விதித்து அவர் நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையில், டிரம்பின் வரி நடவடிக்கைக்கு கனடாவும் மெக்சிகோவும் உடனடியாக எதிர்வினையாற்றின. அதன்படி, 155 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 13 லட்சம் கோடி) மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவிற்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது: "தென்னாப்பிரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய மனித உரிமை மீறல். அமெரிக்கா இதற்கு துணை நிற்காது. இதனால் அந்நாட்டிற்கு கொடுக்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!