நினைத்த காரியத்தை நிறைவேற்றி தரும் ஐப்பசி அமாவாசை வழிபாடு!

 
காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

ஐப்பசி மாதத்தின் அமாவாசை வழிபாட்டிற்கு நினைத்த காரியம் நிறைவேற்றி வைக்கும் சக்தி உண்டு. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் விரதமிருந்து சிவ வழிபாடு மேற்கொள்வது சிறப்பான பலன்களை தரவல்லது. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் அனைத்து  பிரார்த்தனைகள், வேண்டுதல்களும் நிறைவேறும்.

வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

இன்றைய சமையலில் புடலங்காயை சேர்த்துக் கொள்வது மிகவும் விசேஷம். அதே போல் இந்நாளில் பித்ருக்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து வீட்டிலேயே எளிய வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

பித்ரு வழிபாட்டிற்கு ஆசைகளை நிறைவேற்றித் தரக் கூடிய அற்புதமான சக்தி உண்டு. வம்சம் தழைக்க வேண்டும் என முதலில் வந்து நமக்கு உதவி செய்வது பித்ருக்கள் தான். லிங்கத்தை வைத்திருப்பவர்கள் அதற்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம் இவைகளால்  அபிஷேகம் செய்து வழிபடலாம்.

வில்வ இலைகளால் அர்ச்சித்து சிவ ஸ்தோத்திரங்களை உச்சரித்து, சிவவழிபாடு மேற்கொண்டால் முன்வினை  பாவங்கள்  நீங்குவதாக ஐதீகம். அதே போல் விநாயகருக்கு உகந்த அரச மர இலைகளை பறித்து வந்து விநாயகருக்கு முன்பாக ஒற்றை படையில் அரச இலைகளை அடுக்கி வைத்து, அதன் மீது ஒற்றை அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபமேற்றி வழிபாடு செய்யலாம்.

அரச இலை விளக்கு

இப்படி செய்வதால்  நீண்ட நாள்  பிரார்த்தனைகள் நிறைவேறும். இத்துடன்  பசுவிற்கு வாழைப் பழம், அகத்திக்கீரை, பச்சரிசி-வெல்லம் இவைகளையும் தானமாக கொடுக்கலாம். இதனால்  தொடர் தோல்விகள் வெற்றியாக மாறும் வாய்ப்புக்கள் அதிகம். இந்த அற்புத சக்தி வாய்ந்த அமாவாசையில் பித்ரு வழிபாட்டையும் இதனையடுத்து  இறை வழிபாட்டையும்  மேற்கொள்ள நினைத்த காரியம் நிறைவேறும். சிவன் தாள் பணிவோம். சிவன் அருள் பெறுவோம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!