ஐப்பசி அமாவாசை | எந்த நேரத்தில் திதி கொடுப்பது? எப்படி வழிபட்டால் சிறப்பு?!
பித்ரு கடன் தீர்க்க, சூரியன் ஜாதகத்தில் பலம்பெற ஐப்பசி அமாவாசையில் திதி கொடுப்பது அவசியம். இன்று நவம்பர் 1ம் தேதி மாலை 3 மணி வரை அமாவாசை திதி நீடித்தாலும் இன்று காலை 10.30 மணிக்குள் திதி கொடுப்பது உத்தமம்.
அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு, பித்ருக்கள் நல்லருள் வழங்குவதாக ஐதீகம். ஐப்பசி மாதத்தில் நீர் நிலைகள், ஆறு, நதிக்கரைகளில் கங்கை தேவி வாசம் செய்கிறாள். இந்த மாத அமாவாசை தினத்தில் திதி கொடுத்து, நீர் நிலைகளில் குளிப்பது நன்மை தரும். நமது முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து நமக்கு நல்லருள் புரிய வேண்டி வழிபாடு செய்வதே தர்ப்பணம்.
தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலையில் முன்னோர்களுக்கு படையல் போட்டு விட்டு சாப்பிடலாம். இவற்றுடன் தர்ப்பணம் கொடுத்து முடித்தவுடன் பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவு அளிப்பது கூடுதல் பலன்களை தரும். அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் சிறப்பு. அதனால், அமாவாசை விரதம் இருப்பவர்கள் இதை எல்லாம் செய்ய மறக்காதீங்க. பித்ருக்களின் ஆசி என்றென்றுடன் உங்கள் குடும்பத்தைக் காக்கும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!