ஐப்பசி பெளர்ணமி... திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!

 
கிரிவலம்
ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி பெளர்ணமி துவங்குகிறது. நவம்பர் 16ம் தேதி வரை பெளர்ணமி திதி நீடிக்கிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு  மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

திருவண்ணாமலை

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வர். அதே போல் சித்ரா பௌர்ணமி நாளிலும்  30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.இந்நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

திருவண்ணாமலை

அதன்படி நவம்பர் 15ம் தேதி  வெள்ளிக்கிழமை காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16ம் தேதி சனிக்கிழமை காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. இதனையடுத்து நவம்பர் 15ம் தேதி இரவு பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web