விமானபடை தின அணிவகுப்பு... அக்டோபர் 6ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை!
சென்னை மெரினா கடற்கரையில், விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 6ம் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்நிகழ்ச்சியைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப்படை ஒத்திகைகள் நடந்து வருவதால், சென்னை மெரினா கடற்கரையில் பகுதிகளில் ட்ரோன்கள் போன்று எந்த விதமான பொருட்களும் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் அக்டோபர் 6ம் தேதியன்று சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனை முன்னிட்டு ஒத்திகைகள் அக்டோபர் 5ம் தேதி வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரைப் பகுதியை அக்டோபர் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!