சென்னையில் அக்டோபர் 6ம் தேதி விமானப்படை வான்வெளி சாகசம்... அனுமதி இலவசம்!
இந்திய விமானப்படையில் 92வது நிறுவன தினம் அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அக்டோபர் 6ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் கலந்து கொள்கின்றன.
இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை மறுதினம் அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சிகளும், சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் விமானப்படை சாகசத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!