வடக்கு காசாவில் வான்வழி தாக்குதல்.. பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலியான சோகம்!

 
இஸ்ரேல் தாக்குதலில்

பாலஸ்தீனத்தின் காசா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் குழுவிற்கு எதிராக கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் இதுவரை சுமார் 43 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் காஸா போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போர் நிறுத்தத்துக்கு இடமில்லை என்று கூறும் இஸ்ரேல், காஸா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாவாரியா நகரில் உள்ள வீட்டின் மீது நேற்று மாலை இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ்

காசா சுகாதார அமைச்சின் அவசர சேவை வழங்கிய பட்டியலின்படி, இறந்தவர்களில்  பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் அடங்குவர். இந்த சம்பவம் குறித்து இஸ்ரேலிய ராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web