வைரலாகும் வீடியோ... விபத்துக்குப் பின் மீண்டும் ரேஸில் களமிறங்கிய அஜித்!!
நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளான நிலையில், விபத்திற்குப் பிறகு நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் பந்தயத்தில் களமிறங்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
After Long Time...... Ajith Sir Interview Coming Soon 🥰#AjithKumar #GoodBadUgly #VidaaMuyarchi #Ajitheyy pic.twitter.com/DCX6irPpjF
— Ajith Seenu 2 👑 DARK DEVIL... தல..தாய்..தாரம்.. (@ajith_seenu) January 9, 2025
கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் சிங்கப்பூரில் இருந்து துபாய்க்கு கார் ரேஸ் பந்தயத்திற்காக கிளம்பினார். அங்கு, அவர் கார் ரேஸ் பந்தயத்திற்காக பயிற்சியில் ஈடுபட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் அஜித் ரேஸ் காரில் பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்திற்குள்ளானது.
அங்கிருந்த தடுப்பில் மோதி கார் உடைந்த காட்சிகள் ரசிகர்களை பதற வைத்தது. ஆனால், நல்வாய்ப்பாக அஜித் காயங்கள் ஏதுமின்றி அந்த விபத்தில் இருந்து தப்பித்தார். இந்த நிலையில், மீண்டும் அஜித் கார் ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுமட்டுமல்லாது, கார் ரேஸ் களத்தில் நீண்ட நாட்கள் கழித்து அவர் பேட்டியும் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!