கரூர் விபத்துக்கு “விஜய் மட்டும் பொறுப்பு இல்லை… நாம் எல்லோரும் பொறுப்பு”... தல அஜீத் பளிச்!

 
கரூர்
 

கரூரில் தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் நடத்திய பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டுவரும் நிலையில், நடிகர் அஜித் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது மனவருத்தத்தை பகிர்ந்துள்ளார்.

கரூர் விஜய்

அஜித் கூறியதாவது: “கரூரில் நடந்த விபத்தை ஒரு மனிதருக்கே பொறுப்பு வைப்பது சரியல்ல. இது ஒரு சமூக பிரச்சனை. ரசிகர்களின் எல்லையற்ற அன்பு தான் இத்தகைய விபரீதங்களை உருவாக்குகிறது. கூட்டத்தால் சில நேரங்களில் நாம் வெறித்தனமாகி விடுகிறோம். இதனால் முழு சினிமா துறையும் தவறாகப் புரியப்படுகிறதே என்று வருத்தமாக இருக்கிறது.”

தவெக விஜய்

மேலும் அவர் கூறியதாவது: “மீடியாவும் இதற்குக் காரணம் தான். படங்களின் முதல் நாள் முதல் ஷோவிலேயே ‘ரசிகர்கள் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள்’ என்று பெரிதாக காட்டுவதால் அவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அன்பு காட்டுங்கள், ஆனால் அதில் எல்லை இருக்க வேண்டும். ரசிகர்கள் காட்டும் அன்புக்காக நன்றியுள்ளவனாக இருந்தாலும், அதே காரணத்தால் தான் இன்று குடும்பத்துடன் வெளியில் செல்வது கடினமாகி விட்டது. என் மகனை பள்ளிக்குக் கூட நான் அழைத்துச் செல்ல முடியவில்லை,” என்று அஜித் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!