சொத்து வரி செலுத்தாததால் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு!

 
தென்காசி
 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதாவின் பதவி, சொத்து வரி கட்டாத காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியின் 7வது வார்டு கவுன்சிலராகவும் இருந்த சுதா, தனக்கு சொந்தமான கட்டிடங்களுக்கான சொத்து வரியை நீண்டகாலமாக செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பேரூராட்சி உறுப்பினர்கள் பலமுறை அவரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, கடந்த மாதம் 10ஆம் தேதி 12 உறுப்பினர்கள் இணைந்து சுதாவை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை சமர்ப்பித்தனர். இதற்கிடையில் சுதா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து, தன்னை நீக்குவது தாமதப்படுத்தப்பட்டது. அப்போது செயல் அலுவலர் பதவி காலியாக இருந்ததால் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால், அன்றைய தினம் அவரது பதவி தற்காலிகமாக நீடித்தது.

ஆனால் சொத்து வரி செலுத்தாத நிலை தொடர்ந்ததால், செயல் அலுவலர் வேங்கட கோபு உத்தரவின்படி சுதாவின் பதவி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!