உஷார்... பிப்ரவரியில் 14 நாட்கள் வங்கி விடுமுறை!

இதன் அடிப்படையில் வங்கி பணிகளை திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களின் அடிப்படையில் வேறுபடும். உங்க மாநிலத்தில் என்றென்று விடுமுறை என பார்த்து, அதற்கேற்ப உங்கள் பணப்பரிவர்த்தனைத் தொடர்பான காரியங்களைத் திட்டமிட்டுக்கோங்க.
பிப்ரவரி 2025 மாத வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்
பிப்ரவரி 2- ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 3- சரஸ்வதி பூஜை (அகர்தலா)
பிப்ரவரி 8 - 2 வது சனிக்கிழமை
பிப்ரவரி 9 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 11 - செவ்வாய்க்கிழமை தைப்பூசம் (சென்னை)
பிப்ரவரி 12 - குரு ரவிதாஸ் ஜெயந்தி (சிம்லா)
பிப்ரவரி 15 - லுய்-நகாய்-நி (இம்பால்)
பிப்ரவரி 16 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (மும்பை, நாக்பூர், பெலாப்பூர்)
பிப்ரவரி 20 - மாநில தினம் (ஐஸ்வால், இட்டாநகர்)
பிப்ரவரி 22 - 4வது சனிக்கிழமை
பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 26 - மகா சிவராத்திரி
பிப்ரவரி 28 - லாசர் (கேங்டாக்).
வங்கிகளின் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இந்திய ரிசர்வ் வங்கியின்படி, அனைத்து மாநிலங்களின் விடுமுறைப் பட்டியலும் வேறுபட்டவையாக இருக்கலாம்.இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியில் அவசியமான வேலை இருப்பின் விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கிப்பணிகளை மேற்கொள்ள முடியும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!