உஷார்... 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று... தென் தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!

இன்று முதல் 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஜனவரி 21ம் தேதி முதல் ஜனவரி 23ம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 24, 25 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் நேற்று ஜனவரி 20ம் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 22, காக்காட்சியில் 21, மாஞ்சோலையில் 16, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 11, ராமேசுவரத்தில் 10, மண்டபத்தில் 9, பாம்பனில் 8, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!