உஷார்... தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க!
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் வருகிற ஜனவரி 11ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நோட் பண்ணிக்கோங்க. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்திருப்பவர்கள் இந்த மாற்றத்தைத் தெரிஞ்சுக்கோங்க.
தற்போது திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, செங்கோட்டையில் இருந்து வருகிற 7, 8, 11ம் தேதிகளில் மயிலாடுதுறை புறப்பட்டு செல்லும் ரெயில் (வ.எண்.16848), நாகர்கோவிலில் இருந்து வருகிற 9ம் தேதி மும்பை செல்லும் ரெயில் (வ.எண்.16352), குருவாயூரிலிருந்து 8, 10ம் தேதிகளில் சென்னை செல்லும் ரயில் (வ.எண்.16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 11ம் தேதி ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666), நாகர்கோவிலில் இருந்து வருகிற 7ம் தேதி மும்பை செல்லும் ரரெயில் (வ.எண்.16340), நாகர்கோவிலில் இருந்து வருகிற 11ம் தேதி கச்சிகுடா செல்லும் ரயில் (வ.எண்.16354) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் விருதுநகரில் இருந்து மதுரை ரயில் நிலையம் வருவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில், மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் (வ.எண்.16847) வருகிற 9, 11ம் தேதிகளிலும், கச்சிகுடாவில் இருந்து வருகிற 10ம் தேதி நாகர்கோவில் புறப்படும் ரெயில் (வ.எண்.07435), பனாரசிலிருந்து கன்னியாகுமரி புறப்பட்ட தமிழ்ச்சங்கம் ரயில் (வ.எண்.16368) ஆகியவை திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
நாகர்கோவில் மற்றும் கோவையில் இருந்து வருகிற 7, 9, 11ம் தேதிகளில் புறப்பட வேண்டிய பகல் நேர ரயில்கள் (வ.எண்.16321/16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
மதுரையில் இருந்து வருகிற 9ம் தேதி பிகானீர் புறப்படும் அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22631) திண்டுக்கல் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். குஜராத் ஒகாவில் இருந்து வருகிற 7ம் தேதி ராமேசுவரம் புறப்படும் ரயில் (வ.எண்.16734) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாகவும், கொல்லத்தில் இருந்து வருகிற 11ம் தேதி செகந்திராத் புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.07176) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாகவும் இயக்கப்படும்.
மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22671/22672) வருகிற 7ம் தேதி இரு மார்க்கங்களிலும் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். ஈரோடு-செங்கோட்டை ரயில் (வ.எண்.16845) நாளை (திங்கட்கிழமை) மற்றும் செங்கோட்டை-ஈரோடு ரயில் (வ.எண்.16846) ஆகிய ரெயில்கள் வருகிற 7ம் தேதி கரூர் வரை மட்டும் இயக்கப்படும். திருச்செந்தூர்-பாலக்காடு ரயில் (வ.எண்.16731/16732) வருகிற 9,11ம் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஒகாவில் இருந்து நாளை மற்றும் மதுரையில் இருந்து வருகிற 10ம் தேதி புறப்படும் ஒகா சிறப்பு ரயில் (வ.எண்.09520/ 09519) விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!