உஷார்... அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்... எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம்?! ஈரோடு இடைத்தேர்தல்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து அந்த தொகுதியில் ரூ.50.000க்கும் அதிகமாக பணத்தை எடுத்துச் செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என தேர்தல் அலுவலர் டாக்டர் மனீஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுக்கு வந்துள்ளன. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 3 பறக்கும் படைகள் இந்த தொகுதியில் தற்போது பணியில் அமர்த்தப்பட்டனர். கூடுதலாக பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
அரசியல் கட்சிகள் விளம்பரம் 24 மணி்நேரத்தில் பொதுஇடங்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படும். 48 மணி நேரத்தில் தனியார் இடங்களில் உள்ள அரசியல் கட்சி் விளம்பரங்கள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
மேலும் ரூ.50,000க்கும் அதிகமாக பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை திறக்கப்பட்டு Toll free எண் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!