உஷார்... சென்னை உட்பட 7 மாவட்டங்களில் வெள்ள அபாயம்... பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!
இன்று பிற்பகல் ஃபெங்கால் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில், புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
புயல் மாமல்லபுரம் இடையே கடக்க உள்ள நிலையில், சென்னை ஈஸிஆர் மற்றும் ஓஎம்.ஆர். சாலைகளில் பொது போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தி முதல்வரும் கூறியுள்ளார். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் நீர் நிலைகளில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் இன்று நவம்பர் 30ம் தேதி இந்த மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் தேவையில்லாமல் நீர்நிலை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பத்திரமாக இருங்க மக்களே. மின் சாதனங்களை கவனமுடன் கையாளுங்க. மழைக்காலங்களில் சிறியவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகளைத் தனியே வெளியே அனுப்பாதீங்க.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!