உஷார்... இன்று முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

 
பிப்ரவரி 1

இன்று பிப்ரவரி 1ம் தேதி முதல் பல விஷயங்களில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இப்போது தான் வருடம் துவங்கியது போல் உள்ள நிலையில், காலண்டர் தாள்களில் ஒரு மாதம் கழிந்து விட்டது.

பால் விலை:

இன்று  பிப்ரவரி 1ம் தேதி முதல் பிரபல தனியார் பால் நிறுவனமான திருமலா பால், விலையை உயர்த்தியுள்ளது. அதைப் போலவே ஜெர்சி நிறுவனமும் நாளை மறுநாள் பிப்ரவரி 3ம் தேதி  முதல் பால் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை விலையேற்றம்! புத்தாண்டு தினத்தில் அமல்!!

எல்பிஜி எரிவாயு சிலிண்டர்:

ஒவ்வொரு  மாதமும் முதல் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயித்து, அறிவித்து வருகிறது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில்  மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

UPI பரிவர்த்தனை:

இன்று பிப்ரவரி 1ம் தேதி முதல் யுபிஐ தொடர்பான புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) புதிய விதிகளின் கீழ், சிறப்பு எழுத்துக்களால் செய்யப்பட்ட UPI ஐடிகளுடன் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படாது. இது தவிர, இப்போது எண்ணெழுத்து எழுத்துக்கள் (எழுத்துகள் மற்றும் எண்கள்) மட்டுமே பரிவர்த்தனை ஐடியில் பயன்படுத்தப்படும். இது முந்தைய விதிகளை மாற்றுகிறது, இதன் காரணமாக ஐடியில் சிறப்பு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டால் பணம் செலுத்த முடியாமல் போகலாம்.

யுபிஐ

கார்களின் விலை:

இன்று பிப்ரவரி 1ம் தேதி முதல் மாருதி நிறுவனம், அதன் மாருதி சுசூகி மாடல் கார்களின் விலையை ரூ.32,500 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆல்டோ கே10, ஸ்விஃப்ட், வேகன் ஆர், டிசையர், பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற பிரபலமான கார்களின் விலை உயரும்.

வங்கி சேவைகள்:

இன்று பிப்ரவரி 1ம் தேதி முதல் வங்கிச் சேவைகள் மற்றும் கட்டணங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கோடக் மஹிந்திரா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனை வரம்புகளில் மாற்றங்கள் மற்றும் பிற வங்கி சேவைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டணங்கள் இதில் அடங்கும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web