வாகன ஓட்டிகளே உஷார்.. தமிழகத்தில் இப்படியும் நடக்குது... ஓட்டுநரை தாக்கி இளைஞர் செய்த சம்பவம்!
ஓட்டுநரைத் தாக்கிவிட்டு காரைத் திருடிச் சென்ற இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகளே உஷாராக இருங்க. தமிழகத்தில் புதுசு புதுசாக கொள்ளை, திருட்டு, வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கோவை மாவட்டம் போத்தனூர் சீனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் (40). இவருக்கு சொந்தமாக கார் உள்ள நிலையில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தும், உபெர் செயலி மூலமாக ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும் வாடகைக்கு கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணம்பட்டி அருகே வாடிக்கையாளருக்காக காத்திருந்தார். அப்போது, மற்றொரு காரில் வந்த இளைஞர் ஒருவர், ஊட்டிக்கு செல்ல வேண்டும் எனக் கூறி, அறிவழகன் காரில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை என்ற இடத்தை கார் கடந்து சென்றுக் கொண்டிருந்த போது, அந்த இளைஞர், ஓட்டுநர் அறிவழகனை கத்தியை காட்டி மிரட்டி காரை நிறுத்தச் சொன்னார். அப்போது அறிவழகனை தாக்கிய இளைஞர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து காரமடை காவல் நிலையத்தில் அறிவழகன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் பதுங்கியிருந்த தனுஷ் (20) என்ற இளைஞரை கைது செய்து, அவர் திருடி சென்ற காரை மீட்டனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் கோவை மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் முதல் சாலையை சேர்ந்த தனுஷ் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனுஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!