உஷார்... சென்னையில் மாரத்தான்... இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

 
போக்குவரத்து மாற்றம்

சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்று வருவதால் இன்று காலை 8 மணி வரை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மாரத்தான் போட்டியின் 13வது சீசன் போட்டி ஜனவரி 5 ம் தேதி நடைபெறவுள்ளது. பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்துகின்றனர். இந்த மாரத்தானில் 25,000க்கும்  அதிகமான ஓட்டப் பந்தய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரத்தான் போட்டியை முன்னிட்டு சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

மாரத்தான்

"சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கி.மீ, 32.186 கி.மீ, 21.097 கி.மீ, மற்றும் 10 கி.மீ என பிரெஷ் ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 4 மணி முதல் நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ, எலியட்ஸ் கடற்கரையில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை நடைபெற உள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினரால் அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை  போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னத்திலிருந்து காந்தி சிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அடையாறில் இருந்து வரும்  அனைத்து வாகனங்களும் திரு.வி.க பாலம், டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சாந்தோ ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் காந்தி சிலை வரை  எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம். போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

போக்குவரத்து தடை

வாகனங்கள் கொடிமரச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயிண்ட் அண்ணா சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். ஆர்.கே. சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

LB சாலை x SP சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.

பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல் எம்.ஜி சாலை நோக்கி திருப்பி விடப்படும். MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் நகர் அவென்யூ ML பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web