உஷார்... NRI தான் டார்கெட்... வயசான பெற்றோர்... கோடிகளில் பணம் பறிக்கும் இளம்பெண்கள்... கதறும் ஆண்கள்!

 
செக்ஸ்  கால்  சென்டர்
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தான் டார்கெட். வயசான பெற்றோர்கள் இங்கிருக்கும் போதும், அவர்களைக் கவர்ந்து அந்தரங்கமாக புகைப்படங்களை எடுத்து, கோடிகளில் பணம் பறிக்கிறார்கள் இளம்பெண்கள். இதற்கென பிரத்யேகமாக பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஷீலா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவில் சில காலம் தங்கி இருந்துள்ளனர். அப்போது ஜாய் ஜமீமா (28) என்ற பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அந்த குடும்பத்தில் இருந்த இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டு அவர் மூலம் ஷீலாநகரில் உள்ள அவர்களது வீட்டின் முகவரியை தெரிந்து கொண்டார் ஜாய் ஜமீமா. அதன் பின்னர், இந்தியா திரும்பிய ஜாய் ஜமீமா, ஷீலாநகரில் இருக்கும் போது அந்த இளைஞரின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு உதவுவது போல நடித்துள்ளார்.

நிர்வாணமாக வீடியோ கால் வரச்சொல்லி மிரட்டல்- அடுத்து மாணவி செய்த காரியம்..!!

பின்னர் சில நாட்கள் கழித்து அந்த இளைஞனின் பெற்றோரிடம் உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் ஜாய் ஜமீமாவின் முதல் திட்டம் தோல்வியடைந்தது. பின்னர் அந்த இளைஞனும் அவனது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அதன் பின்னர் அமெரிக்காவில் தங்கியிருந்த இளைஞரை மீண்டும் 2வது திட்டம் தீட்டி விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்துள்ளார் ஜாய் ஜமீமா.

ஜாய் நேராக விமான நிலையம் சென்று  அவரை முரளிநகரில் உள்ள அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். பின்னர் அந்த இளைஞனுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கொடுத்து மயக்கமடைந்த நிலையில் இளைஞருடன் நெருக்கமாக இருப்பது போல புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண் அந்த புகைப்படங்களைக் காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

இதனால், திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறிய இளைஞன் என்ன செய்வது என தெரியாமல் விழித்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம், பீமிலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் செய்து, அந்த இளைஞரை ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். அதன் பின்னர்  ஜமீமாவின் போனை பிளாக் செய்த அந்த இளைஞரை மீண்டும் வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர்களது நிச்சயதார்த்தம் மற்றும் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி உள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், இந்த புகைப்படங்களை வைத்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த வாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். எனினும், அவர் வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ​​ஜமீமா தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். ஜமீமாவை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக அவரது நண்பர்கள் மிரட்டியுள்ளனர்.

இறுதியாக, இம்மாதம் 4ம் தேதி, பாதிக்கப்பட்ட  அவர் அங்கு இருந்து தப்பி, பீமிலி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஜமீமாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப், டேப், 3 போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல் ஜமீமாவும் அவரது தோழிகளும்,  பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் என்ற பெயரில் ஏமாற்றி பெரும் பணம் பறித்ததும் தெரிய வந்தது.

கைது

ஜமீமாவுக்கு இந்தக் கும்பல் பயிற்சி அளித்து, இளைஞர்களை கவர்வது எப்படி? யாரை சிக்க வைக்க வேண்டும்? போதுமான மருந்துகளை எவ்வாறு வழங்குவது? வீடியோவில் மிரட்டி பணம் பறிப்பது எப்படி? என்று விளக்கி பயிற்சி அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, ஜமீமாவின் வலையில் விழுந்து பணத்தை இழந்ததாக மற்றொரு இளைஞர் தற்போது புகார் அளித்துள்ளார். எனவே ஜமீமாவின் வலையில் சிக்கியவர்கள் போலீசில் புகார் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!