உஷார்... HMPV வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம்... எப்படி தற்காத்துக் கொள்வது... தமிழக சுகாதாரத்துறை ஆலோசனை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில், 3 மாத பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியது. அந்த 2 குழந்தைகளுக்கும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் பெங்களூருவில் வீட்டை விட்டு வெளியில் வரும் போது மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதே போன்று குஜராத்திலும், தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம் மாவட்டத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எச்.எம்.பி.வி. வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வைரஸ் அனைத்து வயதினரையும் பாதிக்கலாம் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, சோர்வு, இருமல், காய்ச்சல் அல்லது குளிர் ஆகியவை தொற்றுக்கான அறிகுறிகள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!