உஷார்... இன்று உருவாகிறது புயல்... தமிழகத்தில் டிசம்பர் 1 வரை மழை நீடிக்கும்!

 
புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து இன்று புயல் உருவாகிறது என்றும், இந்த புயல் வடக்கு - வடமேற்காக நகர்ந்து தமிழ்நாட்டின் கடற்கரையை நோக்கி வரும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 630 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது என்றும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்று புயலாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

நாளை அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தமிழக கடற்கரை பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்பிட என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web