உஷார்... நாளை முதல் 3 நாட்களுக்கு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை!

இது குறித்து மருதமலை கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை ஜூலை 28ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட நாள்களில் மலைப் பாதையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதி மற்றும் தேவைகளுக்காக கோயில் நிா்வாகம் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகள் மூலமும், படிக்கட்டுகள் மூலமாக சென்று பக்தா்கள் வழிபாடு செய்யலாம்.” எனத் தெரிவித்துள்ளது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்க் குழு தலைவா் ச.ஜெயக்குமாா், செயல் அலுவலா் ரா.செந்தில்குமாா் ஆகியோர் செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!