இன்றும், நாளையும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு... சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நாளை திருப்பத்தூர் பகுதியில் மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம் நடைபெற உள்ள நிலையில், இதை முன்னிட்டு இன்று மதியம் முதல் நாளை வரை சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் எஃப்.எல்.-2 கிளப் கடைகள் முழுவதுமாக மூடப்படும் என கலெக்டர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர்: 7571- காரைக்குடி ரோடு, 7740- மின்நகர், 7747- சோலுடையான்பட்டி, 7573- தென்மாபட்டு
மதகுபட்டி: 7703- சிவப்பிரகாசம் நகர், 7705- ஒக்கூர்

சிவகங்கை நகரம்: 7552- திருவள்ளுவர் தெரு, 7556- பிள்ளைவயல் காளியம்மன் தெரு, 7414- ரெயில்வே நிலையம், 7577- ராகினிபட்டி, 7514- அஜீஸ் தெரு
மானாமதுரை: 7541- மானாமதுரை நகர், 7544- ரெயில்வே நிலையம், 7663- கீழமேல்குடி, 7669- முத்தனேந்தல், 7680- கஞ்சிமடை, 7706- வளநாடு விலக்கு ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை
திருப்பாச்சேத்தி: 7512- பழையனூர்

திருப்புவனம்: 7685- நெல்முடிகரை, 7682- புலியூர், 7547- வன்னிக்கோட்டை கிராமம், 7675- கலியாந்தூர்
பூவந்தி: 7615- பூவந்தி மேலூர் ரோடு
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு படி, அனைத்து மது பான கடைகள் மூடப்படும். இந்த காலங்களில் பொதுமக்கள் இந்த பகுதிகளில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
