தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த இந்த முக்கிய தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைப்பு!
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்வேறு செமஸ்டர் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இன்று வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கைக் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த பல்வேறு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதே போன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இளநிலை மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், டிப்ளமோ தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் (சிவகங்கை , இராமநாதபுரம் மாவட்டங்களில்) இன்று நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறையில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!