இன்று நடைபெற இருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைப்பு!
இன்று நடைபெற இருந்த சென்னை அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் உட்பட அனைத்து பல்கலைக்கழக முக்கிய தேர்வுகளும், செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வேறோரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில் இன்று பிற்பகல் காரைக்கால்-மாமல்லபுரம் புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இன்று பிற்பகல் புயல் கரையைக் கடக்கும் போது ஒருசில இடங்களில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சென்னை, புறநகர் பகுதிகளிலும் இன்று ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இன்று நவம்பர் 30ம் தேதி நடைபெற இருந்த அனைத்துப் பருவத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!