இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி!! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!!

சதுரகிரி மலை மேல் இருக்கும் சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை , பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளுக்காக திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று மே 17 ம் தேதி புதன்கிழமை முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலை ஏறக்கூடாது. காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
இந்த நாட்களில் மழை பெய்தால் பக்தர்களுக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!