தொடர் கனமழை... மாற்றிவிடப்பட்ட ரயில்கள்!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, கிண்டி, அடையாறு, ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, திருவானியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையிலிருந்து வெளி மாநிலத்துக்கு செல்லும் ரயில்களின் பாதை மாற்றப்பட்டுள்ளது. வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதை மாற்றப்பட்டுள்ளது.
சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய மும்பை எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீச் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. கோவையில் இருந்து வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கோவைக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!