அம்மாடியோவ்! ஒரே நாளில் ரூ1,34,00,00,000/- க்கு பத்திரப்பதிவு!

 
அம்மாடியோவ்! ஒரே நாளில் ரூ1,34,00,00,000/- க்கு பத்திரப்பதிவு!


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் துறை வாரியாக பல அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ134,00,00,000/- கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு நடைபெற்றுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த அதிமுக அரசு அரசாங்கத்தை 5 லட்சம் கோடி கடனில் விட்டுச் சென்றுள்ளது.சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் மாவட்ட பத்திரப்பதிவர்கள் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பத்திர பதிவு முறையாக நடந்துள்ளதா எந்தந்த இடங்களில் தவறான பதிவுகள் நடந்திருக்கிறது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அம்மாடியோவ்! ஒரே நாளில் ரூ1,34,00,00,000/- க்கு பத்திரப்பதிவு!

தவறான பத்திரங்களை பதிவு செய்பவர்களின் பத்திர ஆவண எழுத்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தவறான போலி பத்திரப்பதிவுகள் மற்றும் ஆள் மாறாட்டம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு குறித்த புகார்களுக்கு தனி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் புகார்களில் 1 மணி நேரத்திற்குள், தீர்வு காணப்பட்டு வருகிறது. திமுக பொறுப்பேற்ற 2 மாத காலத்திற்குள் இதுவரை பெறப்பட்ட 5000 புகார்களில் 2500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.அரசு வழிகாட்டு மதிப்பீட்டின் படி மட்டுமே பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கடந்த வாரத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய்க்கு பத்திரபதிவு நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் இந்த தொகை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு விரைவில் ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web