செம... கபில்தேவ், ஸ்ரீசாந்த் வரிசையில் உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்குத் தள்ளிய வீராங்கனை அமன்ஜோத் கெளர்!

 
அமன் ஜோத்
 

நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்றில் முதல்முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியின் பின்னணியில், பஞ்சாபைச் சேர்ந்த இளம் ஆல்–ரவுண்டர் அமன்ஜோத் கெளரின் போராட்டமும் உறுதியும் முக்கிய பங்காற்றின. ஏழ்மைச் சூழ்நிலையிலும் தந்தையின் உறுதியால் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர், தனது திறமையால் உலக மேடையில் இந்தியாவை உயர்த்தினார்.

அமன் ஜோத்

உலகக் கோப்பை தொடர் முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் இருந்தபோது, அமன்ஜோத் கெளர் களமிறங்கி தீப்தி சர்மாவுடன் இணைந்து இந்தியாவை மீட்டார். அவர் 57 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 269 ரன்கள் இலக்கை நிர்ணயிக்க உதவினார். தொடரின் அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தால் அணிக்குத் தன்னம்பிக்கை அளித்த அவர், பந்துவீச்சிலும், பீல்டிங்களிலும் சிறந்து விளங்கினார்.

அமன் ஜோத்

அமன்ஜோத் கெளரின் பீல்டிங் திறமை இறுதிப் போட்டியில் வெளிப்பட்டது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸை ரன்–அவுட் செய்ததுடன், ஆபத்தான லாரா வால்வார்டின் கேட்சை ஒற்றைக் கையில் பிடித்து இந்திய வெற்றியை உறுதி செய்தார். இதனால், 1983ல் கபில் தேவ், 2007ல் ஸ்ரீசாந்த், 2024ல் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் வரிசையில், 2025 உலகக் கோப்பை இறுதியில் இந்தியாவை வெற்றிக்குத் தள்ளிய வீராங்கனையாக அமன்ஜோத் கெளரும் இடம்பிடித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!