மொபைல் எண்ணால் ’அமரன்' படத்துக்கு புதிய சிக்கல்!

 
அமரன்

 தமிழ் திரையுலகில் தீபாவளி ரிலீசாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த திரைப்படம் வசூலை அள்ளிக்குவித்து  வருகிறது. இதனிடையே இந்த திரைப்படத்தில் முஸ்லீம்களை தவறாக சித்தரித்து இருப்பதாக சில  முஸ்லீம் அமைப்புகள் மற்றும் சில கட்சிகள் போராட்டங்களை நடத்தினர். இதனால் ஒரு சில திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது.  

அமரன்


இந்நிலையில், அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் நம்பர்  ஒளிபரப்பப்பட்டதாக கூறி இளைஞர் ஒருவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி தோன்றும் காட்சியில் ஒரு மொபைல் எண் காட்சிப்படுத்தப்பட்டது.

‘அமரன்’

இந்நிலையில், அந்த நம்பருக்கு சொந்தமான இளைஞர் ஒருவர் பட நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளார். தனது நம்பர் திரைப்படத்தில் திரையிடப்பட்டதால் அடிக்கடி தனக்கு தொடர்ந்து அழைப்புக்கள் வருவதாகவும், இதனால் தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் பொறியியல் மாணவர் வாகீசன் இழப்பீடு தொகை கேட்டு போலீசில் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web