விதிமுறைகளில் திருத்தம்... ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி!

இது வரை ஆதார் குறித்த தகவல்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆதாா் சட்டம் 2016இன் கீழ், சிறந்த ஆளுகைக்கான ஆதாா் விவரங்கள் சரிபாா்ப்பு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி அரசு மட்டுமின்றி தனியாா் நிறுவனங்கள் வழங்கும் இணையவழி வா்த்தகம், பயணம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தடையின்றி சுமுகமாக பெற இந்தத் திருத்தம் உதவும். பொது நலன் கருதி பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு ஆதாா் விவரங்களை அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதாா் விவரங்களைப் பயன்படுத்த விரும்பும் தனியாா் நிறுவனங்கள், அதற்கான தேவை குறித்த விவரங்களுடன் மத்திய அல்லது மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையிடம் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆராய்ந்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், அதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்.
இதை அந்த அமைச்சகம் உறுதி செய்து தகவல் அனுப்பிய பின்னா், ஆதாா் விவரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நிறுவனங்களின் விவரங்களை, மத்திய அல்லது மாநில அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
வணிகப் பயன்பாடுகளுக்கு ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதாா் சட்டத்தின் 57வது பிரிவு அனுமதி அளித்தது. ஆனால் இந்தச் சட்டப் பிரிவால் ஆதாா் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அந்தப் பிரிவை 2018ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!