மீண்டும் தொடங்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சேவை.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமாகும். இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், மக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் விமான சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் அமெரிக்கா முழுவதும் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன. விமானத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், சில மணி நேர தாமதத்திற்கு பின், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மீண்டும் சேவையை துவக்கியுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் விமான சேவை பாதிக்கப்பட்டது, 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு, காலை 8 மணி முதல் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!