இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்து பலாத்காரம்.. மர்ம நபர் வெறிச்செயல்!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி,60. நேற்று முன்தினம் மாலை சென்னங்கரணி கிராமத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, இயற்கை உபாதை கழிக்க சென்னங்கரணி ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். இதை கவனித்த மர்ம நபர் ஒருவர் பூங்கொடியை புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பூங்கொடி அலறினார். இதனால், பூங்கொடியை மர்ம நபர் கடுமையாக தாக்கினார்.
பூங்கொடியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் பலத்த காயம் அடைந்த பூங்கொடியை மீட்டு ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூங்கொடியை திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பூங்கொடியிடம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பூங்கொடி சென்ற பகுதியில் ஆறுவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், வடமாநில இளைஞர்கள் பலர் உள்ளனர். இதனையடுத்து வடமாநில இளைஞர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!