“பாமக குழப்பத்திற்கு திமுகதான் காரணம்” ... அன்புமணி ஆவேசம்!
பாட்டாளி மக்கள் கட்சியில் நீடிக்கும் உள்கட்சி மோதல் மாமல்லபுரத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெடித்தது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “பாமக குழப்பத்துக்கு திமுகதான் காரணம். என்னென்னமோ சொல்லி அப்பா–மகன் உறவுக்குள் இடைவெளியை உருவாக்கிவிட்டார்கள்” என்று குற்றம்சாட்டினார். தலைவர் பதவி, சின்னம், கட்சி பெயர் தொடர்பாக போலி ஆவணங்கள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

“ஐயா குழந்தை மாதிரி மாறிவிட்டார். அவரைச் சுற்றி தீய சக்திகளும், திமுக கைக்கூலிகளும் இருக்கிறார்கள். அவர் பெயரில் என்ன அறிக்கை வெளியாவதென்பதே அவருக்குத் தெரியாது” என்று அன்புமணி ஆவேசப்பட்டார். கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும், வன்னிய சமுதாயத்துக்காகவும் தான் மன உளைச்சல், தூக்கமில்லாத நாட்களை அனுபவித்து வருவதாக கூறினார். “இன்னும் 3 மாதங்களில் யார் யார் ஜெயிலுக்கு போகிறார்கள் என்பதைப் பாருங்கள்” என்றும் எச்சரித்தார்.

ஜி.கே. மணியை குறிப்பிட்டு அன்புமணி கடுமையாக விமர்சித்தார். “25 வருடம் ராமதாஸை தலைவராக்கி அழகுபார்த்தவர் அவர்தான். என்னை தலைவராக்கிய அடுத்த நாளிலிருந்தே சூழ்ச்சி தொடங்கியது” என்றார். ஜி.கே. மணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மாமல்லபுரம் கூட்டம் பாமகவின் உள்ளக பிளவை வெளிப்படையாக காட்டி விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
