உல்லாசத்திற்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்.. பெண்ணை சரமாரியாக குத்திக் கொன்ற நபர் கைது!

 
பாஞ்சாலி

தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவை சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி பாஞ்சாலி (39), இவர் நேற்று முன்தினம் இரவு சிவகிரி மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது, ​​பைக்கில் வந்த ஒருவர், பாஞ்சாலியிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக சரமாரியாக குத்தினார். இதில் பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

கொலை

வாசுதேவ நல்லூரைச் சேர்ந்த சமுத்திரவேல் (44) என்ற கூலித் தொழிலாளி பாஞ்சாலியை கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.சமுத்திரவேல் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பாஞ்சாலிக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. இதன் காரணமாக பாஞ்சாலியை என் விருப்பத்திற்கு இணங்க வற்புறுத்தினேன். ஆனால் அவளுடைய மகன்கள் வளர்ந்துவிட்டதால் அவள் என் விருப்பத்திற்கு இணங்க மறுத்துவிட்டாள்.

கைது

இந்நிலையில் அவள் கடைக்கு வந்ததும் என் விருப்பத்திற்கு இணங்க வற்புறுத்தினேன். அவள் மறுத்ததால், நான் அவளை கத்தியால் பலமுறை குத்தினேன். இதில் அவர் உயிரிழந்தார். போலீசார் என்னை கைது செய்துள்ளனர். அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட சமுத்திரவேலை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web