நிச்சயத்தை நிறுத்தியதால் ஆத்திரம்.. மணமகனின் சகோதரர் மீசையை வெட்டிய மணப்பெண் குடும்பத்தார்!

ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் பதிவான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நிச்சயதார்த்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், மணமகனின் குடும்பத்தினர் இறுதியாக நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தனர். இது இரு குடும்பங்களுக்கிடையில் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியது, மேலும் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் சகோதரனைப் பிடித்து மீசையை வெட்டத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்களை தடுக்க எவ்வளவு முயன்றும் விடவில்லை. இந்த வீடியோ வைரலான பிறகு, மணமகன் இது தொடர்பாக மற்றொரு வீடியோவை வெளியிட்டு, "நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டது எங்கள் தவறு அல்ல. நிச்சயம் முன் மணமகள் புகைப்படத்தில் வேறு மாதிரியாக இருந்தார். ஆனால் நேரில் அப்படி ஒரு சதவீதம் கூட இல்லை..
இந்த ஏமாற்றத்தை எங்களால் தாங்க முடியவில்லை. அதனால்தான் எங்களுக்கு சிறிது நேரம் தேவை என்று சொன்னோம். எங்களுக்கு நிறைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, மணமகனின் குடும்பத்தினர் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். டாங்கிடி காவல் நிலைய பொறுப்பாளர் மகேந்திர குமார் கூறுகையில், "இரு தரப்பிலிருந்தும் இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை. தற்போது, போலீசார் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்" என்றார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!